'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார் | சங்கீதா பற்றி அவதூறு : விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம் | ரஜினி, கமல் படத்தை பிலிம் ரோலில் படமாக்கும் நெல்சன் | அறிவித்துவிட்டு 'அப்டேட்' தராத 'ஆசை' | 'எக்கோ' பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ் | பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் |

யு டியுப், மற்றும் சமூக வலைத்தளங்களில் தெலுங்கு சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் இடையே தான் அதிகமான போட்டி நிலவி வருகிறது. இன்று காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளும், தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், 'கலாவதி' பாடலை ஒரு நாள் முன்னதாக நேற்றே வெளியிட்டுவிட்டார்கள். நேற்று மாலை வெளியான இப்பாடல் அதற்குள் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தென்னிந்தியப் படங்களில் மிக விரைவாக 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய சாதனையான 'புஷ்பா' படத்தின் 'ஓ அன்ட்டாவா…' பாடல் தான் மிக விரைவாக 12 மில்லியன் சாதனையைப் படைத்திருந்தது.
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக் குத்து' இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. மகேஷ் பாபுவின் 'கலாவதி' பாடல் படைத்த சாதனையை அடுத்த ஒரு நாளைக்குள் விஜய்யின் 'அரபிக்குத்து' முறியடிக்குமா என்பதை நாளைக்குள் தெரிந்துவிடும்.
விஜய், அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோரின் கூட்டணி என்பதால் புதிய சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது.




