இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், கார்த்திகேயா, ஹுகுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. இம்மாதம் 24ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இப்படம் எப்படியிருக்கிறது என்பது பற்றி ராஜேஷ் வசானி என்பவர் இன்று காலை டுவிட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“ஜீ குழுவினருடன் 'வலிமை' படம் பார்த்து ஆச்சரியப்பட்டேன். பாஸ்ட் அன்ட் பியூரியஸ் மற்றும் மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு இந்திய பதில், விரைவில் திரையில் தீயாக பரவ உள்ளது. போனிகபூரிடம் இருந்து ஒரு த்ரில்லர். உங்கள் மூச்சை உங்களிடமிருந்து அடித்துச் செல்லும். 'புஷ்பா' ஆரம்பம் என்றால் 'வலிமை' கிளைமாக்ஸ்'', என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ராஜேஷ் வசானி என்பவர் போனிகபூருக்கு நெருக்கமானவர் என்கிறது திரையுலக வட்டாரம். நண்பரின் படம் என்பதற்காக அவர் பாராட்டவில்லை, உண்மையைத்தான் சொல்கிறார் என்றும் சொல்கிறார்கள்.




