சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் காதல் ஜோடி யார் என்பது சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் அவர்கள் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கொரானோவுக்கு முன்பாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிட்டு பலரையும் பொறாமைப்பட வைத்தவர்கள். கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாடுகளுக்கு அதிகம் செல்லவில்லை. இருந்தாலும் ஓரிரு முறை தனி விமானத்தில் பயணம் செய்து அந்த வீடியோக்களைப் பதிவிட்டு ஆச்சரியம் கலந்த பொறாமைப்பட வைத்தார்கள்.
காதலியுடன் சுற்றுலா சென்று நீண்ட நாட்களாகிவிட்டது என்ற வருத்தத்தில் நயன்தாராவின் பழைய சுற்றுலா புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து “நீ……….ண்ட விடுமுறைக்காக, வேலைகள் முடிவதற்காகக் காத்திருக்கிறேன். பேபியுடன் பயணம் செய்வது மிஸ்ஸிங்க,” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.