துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? | மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் |

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்' மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. அவர் கவலைக்கிடமாக உள்ளார். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர், டாக்டர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.