தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் | பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை | 'நான் ருத்ரன்' படத்தில் நடிக்க மறுப்பு : 20 கோடி நஷ்டஈடு கேட்டு தனுசுக்கு நோட்டீஸ் | ஜெயிலர் 2 படத்தை ஜூன் மாதத்திலேயே வெளியிட திட்டம் |

தமிழ் நாவல் உலகில் பல காலமாக விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நாவல் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்'. ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் இந்த நாவல்தான் அதிகம் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள்.
எம்ஜிஆர் உள்ளிட்ட சிலர் இந்த நாவலைப் படமாக்க முயற்சித்து தோற்றுப் போனார்கள். ஆனால், மணிரத்னம் படப்பிடிப்பையே நடத்தி முடித்துவிட்டார். இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் இந்த வருடக் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வழங்குவதே இல்லை. படத்தின் அறிவிப்புக்குப் பிறகு ஓரிரு அப்டேட் மட்டும்தான் வந்திருக்கும். இந்நிலையில் இன்று திடீரென டுவிட்டரில் 'பொன்னியின் செல்வன்' அப்டேட்டை ஐஸ்வர்யா ரசிகர்கள் அதிகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தில் நந்தினி, மந்தாகினி என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய். கோடை விடுமுறை வெளியீடு என்றால் இந்நேரம் படத்தின் அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக ஆரம்பித்தால் அது போய்க் கொண்டேயிருக்கும். அவ்வளவு கதாபாத்திரங்கள் நாவலில் உள்ளன. ரசிகர்களின் அப்டேட் வேண்டுகோள் படக்குழுவினருக்கு எட்டுமா ?.