
விஜய் தேவர்கொண்டாவை ஓவர்டேக் செய்த அல்லு அர்ஜூன்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரை 12 மில்லியன் பாலோயர்களை கொண்ட முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. ஆனால் "புஷ்பா ; தி ரைஸ்" படம் வெளியானபின் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர் பலம் இன்னும் அதிகரித்து அவையெல்லாம் இன்ஸ்டாகிராம் பாலோயர்களாக மாறியுள்ளன.
ஆம்.. தற்போது 14.5 மில்லியன் பாலோயர்களுடன் இருக்கும் விஜய் தேவரகொண்டாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு 16 மில்லியன் பாலோயர்களுடன் முதல் இடத்தில் ஜம்மென்று அமர்ந்துவிட்டார் அல்லு அர்ஜுன். குறிப்பாக கடந்த பத்து நாட்களுக்குள் மட்டுமே புதிதாக பத்து லட்சம் பாலோயர்கள் அல்லு அர்ஜுனை பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள் என்றால் எல்லாம் புஷ்பா மயம் தான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!