
பழம்பெரும் நடிகை ரத்னா காலமானார்
74 வயதான ரத்னா, சென்னை பாலவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த 19ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் நேற்று தான் வெளியானது. ரத்னாவுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!