பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சினிமா நடிகைகள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். கிளாமரான, கவர்ச்சியான புகைப்படங்கள் என அடிக்கடி தவறாமல் புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால், குளியல் படங்கள் என பீச்களில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படங்கள்தான் அதிகம் வந்துள்ளன.
நடிகை ஆண்ட்ரியா வித்தியாசமாக 'பாத்-டப்' புகைப்படங்களை இன்று வெளியிட்டுள்ளார். நுரை பொங்கும் பாத்-டப்பில் மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. அதில் ஒரு படத்தில் அவரது கால்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இப்படி பாத் டப் புகைப்படங்களை இதற்கு முன்பு தமிழ் நடிகைகள் யாரும் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை என்றே ஞாபகம்.
ஆண்ட்ரியா தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் அவர் முதன்மை நாயகியாக நடித்துள்ள 'பிசாசு 2' படம்தான் அவரது அடுத்த வெளியீடாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.




