'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு | கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? | 'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை | ‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு | 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! | ரஜினி - கமல் இணையும் படம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது? | தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது | டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது |

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் எதற்கும் துணிந்தவன்.. பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஏற்கனவே முடிவடைந்து விட்டது. வரும் பிப்-4ஆம் தேதி ரிலீசாகும் என கடந்த டிசம்பர் மாதமே தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போதைய கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போக வாய்ப்பிருக்கும் என தெரிகிறது. தயாரிப்பு நிறுவனமும் இதை சூசகமாக உணர்த்தியுள்ளது. அதாவது இதற்கு முன்னால் வைத்திருந்த ரிலீஸ் தேதியுடன் கூடிய கவர் போட்டோவை மாற்றிவிட்டு ரிலீஸ் தேதி குறிப்பிடாத அதே டிசைனில் உருவாக்கப்பட்ட மற்றொரு கவர் போட்டோவை தற்போது மாற்றி வைத்துள்ளனர்.




