Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆனந்தியின் ஒயிட் ரோஸ்

17 ஜன, 2022 - 01:33 IST
எழுத்தின் அளவு:
Anandi's-White-Rose

ஆனந்தி கடந்த ஆண்டு கமலி பிரம் நடுக்காவிரி என்ற ஒரே படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்து முடித்துள்ள அலாவுதீனின் அற்புத கேமரா, டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படங்கள் வெளிவர வேண்டியது உள்ளது. இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ஒயிட் ரோஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை ஆர். கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோ வின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சுசி கணேசனின் உதவியாளர் ராஜசேகரன் இயக்குகிறார். தயாரிப்பளர் ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ராஜசேகரன் கூறியதாவது: மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. சைக்கோ திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போதை வழக்கில் சிறை சென்ற பிறகு தமிழில் மீண்டும் நடிக்கிறார் ராகினி திவேதிபோதை வழக்கில் சிறை சென்ற பிறகு ... விருமன் யார்? இயக்குனர் விளக்கம் விருமன் யார்? இயக்குனர் விளக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)