'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் | 58 மணி நேரத்தில் 100 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3' | பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள் | ‛ஜனநாயகன்' ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட் | மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர | ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு | சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி | திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா | பசில் ஜோசப், அல்லு அர்ஜுன் கூட்டணி உறுதி : ஆனால் அது சக்திமான் கதை அல்ல | விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த பாலிவுட் இசையமைப்பாளர் |

உலக அளவில் திரைப்பட துறையில் ஓடிடி நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. கொரோனாவுக்கு பின் இன்னும் அசுர வளர்ச்சி எடுத்துள்ளன. இந்நிலையில் ஓடிடி நிறுவனங்கள் மீது இயக்குனர் சீனு ராமசாமி பகீர் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
"சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்றுத் தள்ளி வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள். கதைக்கு முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை, கதை படங்கள் வளரும். புதியவர்கள் தழைப்பர்.." என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
சீனுராமசாமி கூடல் நகர் படம் மூலம் அறிமுகமானார். தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி இயக்குனர் ஆனார்.




