இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா | துல்கர்-கல்யாணி வசனம் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; கேரள போலீஸ் பலே ஐடியா | பேருந்து - கார் விபத்து: தப்பிய ரஜிஷா விஜயன் பட ஹீரோ | பாவனா படம் பார்க்க வந்த மஞ்சு வாரியர் ஏற்படுத்திய பரபரப்பு | சவுதி அரேபியன் படத்திற்காக கை கோர்த்த சல்மான்கான்-சஞ்சய் தத் |

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரோசி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த தகவல்களை பேட்டிகளில் வெளியிட்டு வரும் எச்.வினோத், தற்போது வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், வலிமை படத்தில் அஜித் போலீசாக நடித்தபோதும் ஒரு சீனில்கூட காக்கி சட்டை அணிந்து நடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அதோடு, இந்த படத்திற்கான கதையை அஜித்திடத்தில் சொன்னபோது, காவல்துறையில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் என்பது போன்று சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறக்கூடாது. அதோடு, அரசியல் குறித்த சர்ச்சையான காட்சிகளோ, தனி மனித தாக்குதலோ இருக்கக்கூடாது என்றும் கண்டிசனாக சொல்லி விட்டார். அதனால் அதுபோன்ற கட்சிகள் எதுவும் வலிமையில் இடம்பெறவில்லை என்றும் ஒரு தகவல் வெளியிட்டுள்ள எச்.வினோத், இந்த படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ள இயக்குனர் விக்னேஷ்சிவன் அந்த பாடல்களுக்கு சம்பளம் வாங்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.