10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

இயக்குனர் பாலாவிடம் பல படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவரும், 'ஆச்சார்யா' என்ற படத்தை இயக்கியவருமான ஆச்சார்யா ரவி, உடல் நலக் குறைவால் காலமானார்.
கடந்த இரண்டு வாரங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரது சொந்த உரான மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(டிச., 28) காலை காலமானார்.
'என்னதான் பேசுவதோ' என்ற படத்தை இயக்கி முடித்திருந்தார். அந்தப் படம் முடிந்து எட்டு வருடங்களாகியும் இன்னும் வெளிவராமல் உள்ளது. அப்படத்தை எப்படியும் வெளியில் கொண்டு வர வேண்டும் என தீவிர முயற்சியில் இருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக இயக்குனர் பாலா, சூர்யா இணையும் படத்திற்கான கதை விவாதத்தில் இருந்து வந்தார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




