பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் 'வலிமை' படம் 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் படத்திற்கு 'பலம்' என்றும் பெயர் வைத்துள்ளார்களாம்.
தெலுங்கு நடிகரான கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடிப்பதால் தெலுங்கில் வெளியாகும் போது அங்குள்ள ரசிகர்களின் வரவேற்பு கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
அஜித்தின் படங்கள் ஹிந்தியில் டப்பிங் ஆகி யூடியூபில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, அவருக்கென ஹிந்தியிலும் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பாலிவுட்டைச் சேர்ந்தவர் என்பதால் ஹிந்தியில் அவரால் படத்தை எளிதில் வெளியிட முடியும்.
இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.




