'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

முத்தையா இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், கார்த்தி, அதிதி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விருமன்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமானது. மூன்றே மாதங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்கள்.
கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்கும் இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முத்தைய, யுவன் கூட்டணி முதல் முறை இணைந்திருக்கும் படம் இது. 'கொம்பன்' படத்திற்குப் பிறகு கார்த்தி, முத்தையா கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்தது பற்றி கார்த்தி டுவிட்டரில், “விருமன்' நிறைவடைந்தது. இயக்குனர் முத்தையா, ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஆகியோரது சரியான திட்டமிடல், நிர்வாகம். அதிதி ஷங்கருக்கு வாழ்த்துகள். உங்கள் அற்புதமான பயணத்திற்கு, கேரியருக்கு, நீங்கள் யதார்த்தமாக நடிக்கிறீர்கள். மீண்டும் யுவன் இருப்பது மகிழ்ச்சி. நன்றி தயாரிப்பாளர் சூர்யா, 2டி என்டர்டெயின்மென்ட், பை பை தேனி,” எனப் பதிவிட்டுள்ளார்.




