தனுஷிற்கு ஜோடியாகும் இளம் நடிகை சாரா அர்ஜுன்...? | மே மாதத்தை குறி வைக்கும் ‛ஏழு கடல் ஏழு மலை' | ஜி.வி.பிரகாஷை இயக்கும் 'ஜோ' இயக்குநர் | சின்னத்திரை பிரபலங்கள் உருவாக்கும் 'தமிழினி' | ரவி மோகனின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் நாயகனாக நடிக்கும் பிரேம்ஜி | 'டிராகன்' படத்திற்காக உடலை மெருகேற்றிய ஜூனியர் என்டிஆர் | பிளாஷ்பேக் : தமிழில் ஐந்து படங்களில் மட்டுமே நடித்த மாலாஸ்ரீ | பிளாஷ்பேக்: ஆக்சன் ஹீரோவாக நடித்த கே. பாலாஜி | 20 அடி ஆழத்தில் ஆடையின்றி நடித்த ஆர்யா |

தமிழில் ஜெய் நடித்த வடகறி இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியபடி அறிமுகமானவர் சன்னிலியோன். அதையடுத்து வீரமாதேவி என்ற சரித்திரப் படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டு விட்டது. இந்நிலையில் தற்போது யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் சன்னி லியோன்.
இந்தப் படத்தில் அவருடன் தர்ஷா குப்தா, யோகிபாபு, ரமேஷ் திலக், சதீஷ் உள்பட படம் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். அதில் சன்னி லியோன் லுங்கி உடையணிந்து நடனமாடி வருகிறார். அந்த பாடலில் தான் நடனமாடிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சன்னி லியோன். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.




