யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? |

மகிழ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தக்ஷன் விஜய் நாயகனாக நடித்து, இயக்கி உள்ள படம் கபளீகரம். மைம் கோபி, யோகிராம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செல்வம், இசை கார்த்திக். இந்த படம் லாரி திருட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
இதுகுறித்து தக்ஷன் விஜய் கூறியதாவது: வட இந்தியாவில் லாரிகளைத் திட்டமிட்டு ஒரு கும்பல் திருடிக் கொண்டுபோகும் குற்றங்கள் நடைபெற்று வந்தன. பல்வேறு சவால்கள், சிரமங்களுக்கிடையே இதைக் காவல்துறை கண்டுபிடித்தது பரபரப்பூட்டியது. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துத்தான் கபளீகரம் படம் உருவாகியிருக்கிறது.
லாரிகளைத் திருடும் போது லாரி ஓட்டி வந்த ஓட்டுநரையும் உடனிருக்கும் கிளீனரையும் கொலை செய்து எரித்து அடையாளம் தெரியாமல் ஆக்கி விடுவார்கள். எந்தத் தடயமும் இருக்காது அவர்களின் செயல்களைப் பார்த்த போலீசார் அது கற்பனையையே மிஞ்சுவதாக இருந்ததாக வியந்துள்ளனர். அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.
கதை கிருஷ்ணகிரியிலிருந்து கோல்கட்டா செல்லும் நெடுஞ்சாலையில் நடப்பதால் பெரும் பகுதி படப்பிடிப்பு நெடுஞ்சாலையில் நடந்துள்ளது என்றார்.




