Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அண்ணாத்த' பிரமோஷன் ஆச்சரியப்பட வைத்த ரஜினிகாந்த்

16 நவ, 2021 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Rajinis-Annaatthe-promotion

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நம்பர் 1 நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த பல வருடங்களாகவே அவருடைய படங்களுக்காக அவர் பிரத்யேக பேட்டிகளை கொடுப்பதில்லை. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாரான '2.0' படத்தின் போது டிவி பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார். அதன்பிறகு அவர் நடித்து வெளிவந்த 'பேட்ட, தர்பார்' படங்களின் போதும் கூட அவர் எந்த பேட்டியையும் கொடுக்கவில்லை. அப்படங்களின் இயக்குனர்களும், நடிகர்கள், நடிகைகளும் தான் கொடுத்திருந்தார்கள்.

ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த படம் 'அண்ணாத்த'. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. மழை காரணமாக கடந்த வாரத்தில் வசூல் மிகவும் குறைந்தது என்றும் சொன்னார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது மகள் உருவாக்கியுள்ள ஹுட் ஆப் மூலம் 'அண்ணாத்த' படம் பற்றி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் 'ஹுட் ஆப்' வளர்வதற்கும், 'அண்ணாத்த' படத்தின் வசூல் ஏறுவதற்கும் அவர் இப்படி பிரமோஷன் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மேலும், 'விஸ்வாசம்' படம் பற்றி அவர் பாராட்டியிருப்பதால், இதுவரை 'அண்ணாத்த' படத்தை போய் பார்க்காத அஜித் ரசிகர்களும் படத்தைப் பார்க்க வாய்ப்புள்ளது என படத்தை வாங்கியவர்களும், திரையிட்டவர்களும் எதிர்பார்க்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ராதே ஷ்யாம் - தமிழ், தெலுங்கில் பாடிய யுவன்ஷங்கர் ராஜாராதே ஷ்யாம் - தமிழ், தெலுங்கில் பாடிய ... அடுத்த மாதம் நிறைவடைகிறது விக்ரம் படப்பிடிப்பு? அடுத்த மாதம் நிறைவடைகிறது விக்ரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Vijay - Chennai,இந்தியா
18 நவ, 2021 - 16:34 Report Abuse
Vijay படத்தை ஊத்தி முடியாச்சு
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18 நவ, 2021 - 05:03 Report Abuse
J.V. Iyer அண்ணாத்தே படம் பார்த்தேன். சூப்பர் ஸ்டார் இனி அமிதாப் பச்சன் போல வயதுக்கு தகுந்த படம் செய்தால் பார்க்க நன்றாக இருக்கும். இன்னும் எழுவது வயதில் இருவது வயது பேரன் போல சண்டை போட்டு என்ன சாதிக்கப்போகிறார்? சாரி தலைவா.
Rate this:
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
17 நவ, 2021 - 10:36 Report Abuse
சொல்லின் செல்வன் இலங்கை தமிழர்களை சுட்டுக் கொன்னப்ப, தூத்துக்குடி அப்பாவி பொது ஜனங்களை கொன்னப்ப, வராத அறிக்கை ஹூட் செயலி மூலமா அண்ணாத்தே படத்துக்கு வருதுன்னா என்ன பொருள்? ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. ரஜினியா கொக்கா
Rate this:
mohan - chennai,இந்தியா
16 நவ, 2021 - 11:55 Report Abuse
mohan படம் வசூல் 200கோடி ஒரு வாரத்தில் பண்ணியாச்சு என்று அடிகர்ப்பூர்வமாக சன் பிக்ச்சர் போஸ்ட் போடுறாங்க இருந்தாலும் வசூல் குறைவு எப்படி சொல்லுறீங்க ?
Rate this:
P.Niranjan - colombo,இலங்கை
16 நவ, 2021 - 11:32 Report Abuse
P.Niranjan எப்பிடி இருந்த மனுசேன்? இவர் படம் ரீலிஸ் நாள் தீபாவளி இருக்கும். இப்ப தீபாவளிக்கு படம் ரீலிஸ் பண்ணுயும் ஓடமாடேங்குது. இப்பிடி பிச்ச எடுக்க வேண்டி இருக்குது. ரஜினிய அழிச்சதே அவர் குடும்பம் தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in