ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

மணிரத்னம் தயாரிப்பில் ஓடிடியில் வெளியான இணைய தொடர் நவரசா.
ஒன்பது ரசங்களை குறிக்கும் வகையில் ஒன்பது பேர் ஒன்பது கதைகளை இயக்கியிருந்தனர். இதில் பணியாற்றிய அனைவரும் ஊதியம் வாங்காமல் வேலை பார்த்தனர். படத்தின் மூலம் கிடைத்த பணம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 12,000 திரைப்பட தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்கள் தவணை முறையில் அளிக்கப்பட்டது. இந்த ஆந்தாலஜியில் நகைச்சுவை ரசத்துக்கான கதையை பொன்ராம் இயக்கினார்.
கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்தார். இறுதியில் பொன்ராம் படத்தை நீக்கிவிட்டு ப்ரியதர்ஷன் இயக்கிய படம் இடம்பெற்றது. இது பொன்ராம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கு கடும் ஏமாற்றமாக அமைந்தது. பொன்ராமின் படம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாமலிருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த பொன்ராம், "ஆடியோவில் பிரச்னை இருந்ததால் நான் இயக்கிய படத்தை தேர்வு செய்யவில்லை என்றார் மணிரத்னம். அவரது விளக்கம் எனக்கு திருப்திகரமாக இல்லை. இன்றுவரை என்னுடைய படம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ககு தெரியாது. அனைவரும் அந்தப் படத்துக்காக உண்மையாக உழைத்தோம். ஆனால், கடைசியில் மனமுடைந்து போனோம் " என்று கூறியுள்ளார்.




