இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! | 'தனுஷ் 56' படத்தில் 'உறியடி' விஜய்குமார்? | 'சிக்மா' படத்தை நம்பும் லைகா நிறுவனம்! |

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. கடந்த வருடம் நிகழ்ந்த கிரேன் விபத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடக்கவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி 'இந்தியன் 2' படத்தை முன்னுரிமை கொடுத்து ஷங்கர் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது ஷங்கர் தான் இயக்கி வரும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அதன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் டிசம்பர் மாதத்தில் 'இந்தியன் 2' படத்தை ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. அதற்குள் கமல்ஹாசனும் 'விக்ரம்' படத்தில் நடித்து முடித்துவிடுவாராம்.
'இந்தியன் 2' படத்திற்காக 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவிப்பட்ட நிலையில் படம் மீண்டும் ஆரம்பமாகுமா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமானால் அடுத்த ஆண்டுக்குள் படம் வர வாய்ப்புள்ளது.