பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' |

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் 'ஜேம்ஸ்'. சேத்தன் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் புனித் கதாநாயகனாக நடிக்க பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை புனித் முடித்துக் கொடுத்துவிட்டார். ஆனால், படத்திற்கான டப்பிங்கை அவர் பேசி முடிக்கவில்லை. எனவே, படப்பிடிப்பின் போது அவர் பேசியவற்றை டப்பிங் செய்யாமல் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
அதற்காக மும்பையில் உள்ள ஒலிப்பதிவு ஸ்டுடியோ ஒன்றை அணுக உள்ளார்களாம். புதிய டெக்னாலஜியின் மூலம் புனித் நேரடியாகப் பேசியவற்றை தரம் உயர்த்தி டப்பிங் பேசினால் என்ன ஒரு தெளிவு கிடைக்குமோ அதைக் கிடைக்க வைக்க முயற்சிக்கப் போகிறார்களாம்.
'யு டர்ன்' படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கத்தில் புனித் நடிப்பதாக இருந்த 'த்வித்வா' படம் இந்த மாதம் ஆரம்பமாவதாக இருந்தது. மேலும் சில படங்களிலும் அவர் நடிக்க முடிவு செய்திருந்தார். இவையனைத்தும் இப்போது கைவிடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டது.
'ஜேம்ஸ்' படம்தான் புனித் ராஜ்குமார் நடித்து கடைசியாக வெளிவர உள்ள படமாக அமைய உள்ளது.