சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் |

ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் 'எனிமி' படம் தமிழ், தெலுங்கில் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அதில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், இயக்குனர் ஆனந்த்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஷால், “புனித் ராஜ்குமார் சிறந்த நடிகர் மட்டுமல்ல எனக்கு நல்ல நண்பரும் கூட. அவருடைய இழப்பு திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் தான். அவரைப் போன்ற ஒரு எளிமையான சூப்பர் ஸ்டாரை நான் இதுவரை பார்த்ததில்லை. பல சமூக சேவைகளை அவர் செய்து வருகிறார். புனித் ராஜ்குமாரால் 1800 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களது கல்விப் பொறுப்பை அடுத்த வருடம் முதல் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.
விஷால் அவருடைய அம்மா பெயரில் உள்ள தேவி அறக்கட்டளை மூலம் ஏற்கெனவே சில சமூக சேவைகளைச் செய்து வருகிறார். தற்போது புனித் ராஜ்குமார் செய்து வந்த சமூக சேவைகளையும் எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது அவருக்கு பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.




