ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. டிரைலருக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களும் எழுந்தது. இயக்குனர் சிவா அவருடைய இயக்கத்தில் வெளிவந்த முந்தைய படங்களான 'வேதாளம், வீரம், விஸ்வாசம்' ஆகிய படங்களின் கலவையாக இந்த 'அண்ணாத்த' படத்தைக் கொடுக்க உள்ளார் போலும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள், முந்தைய பாடல்களை ஞாபகப்படுத்தும் இமான் இசை, ஒளிப்பதிவு என பல அம்சங்கள் சிவா - அஜித் கூட்டணியின் படங்களையே ஞாபகப்படுத்துவதாகப் பலரும் சொல்கிறார்கள்.
இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் டிரைலரை ரசித்து வருகிறார்கள். யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் தமிழ் டிரைலர் இரண்டு நாட்களுக்குள் 80 மில்லியன் பார்வைகளை நெருங்கி வருகிறது. தெலுங்கு 'பெத்தனா' டிரைலர் 3 மில்லியனை நெருங்கி வருகிறது. நவம்பர் 4ம் தேதி தமிழ், தெலுங்கில் 'அண்ணாத்த' வெளியாகிறது.




