Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பாவுக்கு தமிழ் எழுத வராது - சவுந்தர்யா ரஜினி

25 அக், 2021 - 20:37 IST
எழுத்தின் அளவு:
My-father-did-not-write-tamil-letters-says-Rajini

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா ஹூட் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார். எழுதப் படிக்க தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள், கருத்துக்களை அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளில ஹூட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளம் அனைவருக்குமானது என்ற அடிப்படையில் சமஸ்கிருத மொழியும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த இந்த செயலியை ரஜினிகாந்த் டில்லியில் இருந்தபடி தனது குரலை பதிவிட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய சவுந்தர்யா, ‛‛என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அவர் டுவீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார். அப்போது பிறந்த யோசனை தான் இந்த ஹூட் செயலி. என் அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்க தெரியும்; ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன். அவருக்கு தமிழ் எழுத தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை'' என்றார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
சிம்பு படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்சிம்பு படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் ... ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து பெற்ற ரஜினி ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து பெற்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

V.B.RAM - bangalore,இந்தியா
26 அக், 2021 - 19:23 Report Abuse
V.B.RAM ஆனானப்பட்ட சைமன் தான் ஒரு மலையாளி என்று ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு உனக்கு ஏன் இந்த அப்பா குதிருக்குள் இல்லை என்று ? உன் அப்பா பெற்ற பெயர் புகழ் எல்லாம் மனைவி , மகள் இருவரும் கெடுத்துவிடுவார்கள்.
Rate this:
26 அக், 2021 - 16:39 Report Abuse
சாம் தவம் செய்து பெத்த பொண்ணு... நீயும் உன்னால என்ன என்ன செய்ய முடியுமோ செஞ்சு விடு மா...
Rate this:
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் ஜனாதிபதி ஆவதற்கு ஆசைப் பட்டாராமே
Rate this:
s vinayak - chennai,இந்தியா
26 அக், 2021 - 09:18 Report Abuse
s vinayak இந்த லட்சணத்திற்கே தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா?
Rate this:
s vinayak - chennai,இந்தியா
26 அக், 2021 - 09:10 Report Abuse
s vinayak அவருக்கு தமிழ் மொழியில் எழுச்சி வரவே வராது.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in