பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் 'ராதே ஷ்யாம்'.
இன்று பிரபாஸின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள். பிரம்மாண்டமான படம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இப்படம் வெளியாக உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் டீசரை வெளியிட்டால் அதன் பார்வைகளில் சாதனை படைக்க முடியாது என ஆங்கிலத்தில் வெளியிட்டுவிட்டார்கள்.
விஷுவலாக டீசர் பிரமாதமாக இருக்கிறது என்ற கருத்துதான் பொதுவாக உள்ளது. ஒரு மர்மமான காதல் கதையாக இப்படம் இருக்கலாம் என டீசரைப் பார்த்து ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. டீசருக்கு ரசிகர்களும் விதவிதமான கமெண்ட்டுகளை அளித்து வருகிறார்கள். பிரபாஸ், கை ரேகை ஜோசியக்காரோ எனவும் கிண்டலடிக்கிறார்கள். இருப்பினும் அதற்குள் 60 லட்சம் பார்வைகளை டீசர் கடந்துள்ளது.
2022 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி இப்படம் வெளியாகிறது.




