ஓடிடியில் லீட் பண்ணுவாரா 'லீடர்' : இந்த வாரப் பட்டியல் வெளியானது...! | திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார் | ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3' | சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம் | பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா | பிராந்திய மொழிகளை பேசுவதில் ஆர்வம் காட்டும் ஸ்ரீலீலா | வில் அம்பு பட இயக்குனர் மரணம் | ஆகஸ்ட் 14ல் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ் | 42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி |

கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டின் குட்புக்கில் இடம்பெற்ற திரை நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா என்பது அந்நாட்டின் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்கள் போலவே அந்நாட்டில் வாழலாம், தொழில் தொடங்கலாம், வேலை பார்க்கலாம். எப்போது வேண்டுமானாலும் வந்து போகலாம்.
ஏற்கனவே அமிதாப்பச்சன், சஞ்சய் தத், ஷாருக்கான், சல்மான்கான், நடிகைகள் ஊர்வசி ரவுட்டாலா,மீரா ஜாஸ்மின், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், டொமினோ தாமஸ், பிருத்விராஜ் உள்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ராவுக்கு கோல்டன் விசா வழங்கி அவரை கவுரவித்துள்ளது. இதுவரை கோல்டன் விசா வழங்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் கோல்டன் விசா பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




