Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸை கலாய்த்த கஸ்தூரி! 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று விமர்சனம்

18 அக், 2021 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-trolled-Biggboss-show

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவது அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமல்ல என்று கூறியுள்ள கஸ்தூரி அந்த நிகழ்ச்சியை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துடன் ஒப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸின் முன்னாள் போட்டியாளரான கஸ்தூரி அந்த நிகழ்ச்சியை விமர்சித்து பதிவிட்டுள்ள டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை தன்னைப் போலவே ஒரு எபிசோடு கூட முழுசா பார்க்காத நபர் யாராவது இருக்கிறீர்களா? அப்படி முழு எபிசோசடையும் பார்க்க முடியாதவர்களுக்கு என்னுடைய ஆறுதல் அரவணைப்பு' என்று பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த டுவீட்டில் ஸ்டார் விஜய், கம்பெனி ஆர்டிஸ்ட், 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம் ஆகிய ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை கம்பெனி ஆர்டிஸ்டுகளுக்கான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் எனவும் கிண்டலடித்துள்ளார். இதற்கு சில ரசிகர்கள் 'அப்புறம் எதுக்கு மேடம் நீங்க பிக்பாஸ் போனீங்க' என கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு தொலைக்காட்சி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக தனக்கு பேசியபடி தொகையை கொடுக்கவில்லை என சர்ச்சையை கிளப்பினார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இறுதிகட்டத்தில் லிங்குசாமியின் தெலுங்கு படம்இறுதிகட்டத்தில் லிங்குசாமியின் ... ரசிகர்களை ஈர்க்கும் மாளவிகா மோகனன் ரசிகர்களை ஈர்க்கும் மாளவிகா மோகனன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
20 அக், 2021 - 19:56 Report Abuse
RaajaRaja Cholan இவளே அந்த நூறு நாள்வேலை கூட ஒழுங்கா முடிக்க முடியாம பாதியில் விரட்டி அடிக்கப்பட்டால் , எல்லாம் சீ சீ இந்த பழம் புளிக்கும் கதை தான்
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
19 அக், 2021 - 16:31 Report Abuse
DVRR பாவம் ஆனாலும் கமலை இப்படியெல்லாம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளி என்று இவ்வளவு இழிவு படுத்தக்கூடாது
Rate this:
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
19 அக், 2021 - 12:34 Report Abuse
Columbus I appreciate her sense of humour.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
19 அக், 2021 - 02:16 Report Abuse
Aarkay வேலையற்ற வீணர்கள்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்த்து நேரத்தை விரயம் செய்வார்கள்.
Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
18 அக், 2021 - 22:14 Report Abuse
Vijay D Ratnam அக்காயிக்கு வாயி கொஞ்சம் பெருசுதான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in