Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாத்த' டீசர்- 'விஸ்வாசம்' இரண்டாம் பாகமா, ரசிகர்கள் கிண்டல்

15 அக், 2021 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Fans-trolled-Annaatthe-Teaser

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் டீசரை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள்.

டீசரைப் பார்த்த பலரும் இது என்ன 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாம் பாகமா என கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு இரண்டு படங்களுக்கும் வித்தியாசமில்லை என்று சொல்லும் அளவிற்கு டீசர் இருப்பதாக பெரும்பான்மையான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஒரு சிலர் ஒரு படி மேலே போய், 'விஸ்வாசம்' படக் காட்சிகளையும், 'அண்ணாத்த' டீசர் காட்சிகளையும் புகைப்படங்களாக இணைத்து எங்கே வித்தியாசம் உள்ளது என மீம்ஸ்களையும் தெறிக்க விட்டுள்ளனர்.

'விஸ்வாசம்' படத்தில் 50 வயது அஜித் 70 வயது தாத்தா போல வெள்ளை முடி, தாடியுடன் இருப்பார். 'அண்ணாத்த' படத்தில் 70 வயது ரஜினிகாந்த் 50 வயது மனிதர் போல கருப்பு முடி, தாடியுடன் இருக்கிறார். இது மட்டும்தான் வித்தியாசம் என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

விமர்சனம், கமெண்ட், கருத்து ஆகியவை பலவாறாக இருந்தாலும் 'அண்ணாத்த' டீசர் 43 லட்சம் பார்வைகளைக் கடந்து, யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யா தத்தாவின் அசத்தல் போட்டோஷூட்ஐஸ்வர்யா தத்தாவின் அசத்தல் ... மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சாய் தரம் தேஜ் மருத்துவமனையிலிருந்து வீடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

16 அக், 2021 - 05:46 Report Abuse
THALA Nachi இதே மாதிரி தான் விஸ்வாசம் போஸ்டை .. சீமாராஜா படம் மாரி இருக்குன்னு சொன்னாங்க ..
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
16 அக், 2021 - 01:46 Report Abuse
Ram டைரக்டர் சிவா அவரால இதுதான் முடியும் ரஜினி வச்சு என்ன செய்ய முடியும் டீஸர் Worst சிவா வின் விவேகம் Part 2 அகா இல்லாம இருந்த சரி
Rate this:
Vijay - Chennai,இந்தியா
15 அக், 2021 - 19:26 Report Abuse
Vijay 24 மணி நேரம் முடிந்துவிட்டது இன்னும் 10 லச்சம் பார்வையளர்களை கிடைக்கவில்லை. ரஜினி பட டீசரில் இது தான் மிக மிக மொக்கையனான டீசர் மற்றும் குறைந்த பார்வையாளர்களை கடந்த டீசர். மாஸ்டர், விஸ்வாசம் எல்லாம் ஒரே நாளில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. ஏன் கமலின் விக்ரம் கூட ஒரே நாளில் 10 லச்சம் பார்வையார்களை கடந்தது. உண்மையை ஒத்து கொள்ளுங்கள்.
Rate this:
15 அக், 2021 - 19:04 Report Abuse
ilaiyaraja muthu 70 வயசுல அந்த இரண்டு பேரும் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்தால் தெரிந்து விடும்....... ரஜினி யார் என்பது
Rate this:
Vijay - Chennai,இந்தியா
16 அக், 2021 - 12:37Report Abuse
Vijayரஜினி காலம் எல்லாம் முடிந்து விட்டது. கடைசியாக அவர் கொடுத்த ஹிட் படம் எது? பேட்டை. அதற்கு முன் எந்திரன். 2.0 ஏகப்பட்ட நஷ்டம். படம் ஓடுதோ இல்லையோ 300 கோடி 4௦௦ கோடி 5௦௦ கோடி என்று சொல்லுவதும் பின் நஷ்ட ஈடு கேட்டு நிற்பதும் தான் அவர் படத்தில் நடக்கிறது. போன படம் தர்பார் கூட அதே நிலை தான்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in