தமிழக அரசு திரைப்பட விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் ஓரளவு குறைந்து திரையுலகிற்கான கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் தமன்னா நடித்துள்ள எப்-3, மேஸ்ட்ரோ, மற்றும் சீட்டிமார் என மூன்று படங்கள் உடனடியாக அடுத்தடுத்து தியேட்டர், ஒடிடி என இரண்டு தளங்களிலும் ரிலீசாக இருக்கின்றன.
இதில் மேஸ்ட்ரோ படத்தை தான் தமன்னா ரொம்பவே எதிர்பார்க்கிறாராம் தமன்னா.. காரணம் இந்தப்படம் இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது. அதில் தபுவுக்கு பெயர் வாங்கி கொடுத்த அந்த கதாபாத்திரத்தில் தான் தமன்னா நடித்துள்ளார். இந்தபடம் வெளியானால் அதற்கடுத்து நாயகியை முன்னிலைப்படுத்திய படங்கள் தன்னைத்தேடி வர வாய்ப்பு உருவாகும் என்பதால் இந்தப்படத்திற்காக கொரோனா ஆபர் என சம்பளத்தில் பெரிய அளவில் குறைத்துக் கொண்டு நடித்துள்ளாராம் தமன்னா.