அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் |

மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் மீண்டும் நேரடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.. இயக்குனர் ஹனு ராகவாபுடி இயக்கும் இந்த படத்திற்கு லெப்டினன்ட் ராம் என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகளில் தயாராகும் இந்த படம் 1964-ம் ஆண்டில் ராணுவ பின்னணியில் நடைபெறும் வகையில் அதேசமயம் ஒரு பீரியட் காதல் கதையாக உருவாகிறது
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சூப்பர் 60, பட்லா ஹவுஸ் ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் மிருனாள் தாக்கூர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படநிறுவனம், துல்கர் சல்மான் மிருணாள் தாக்கூர் இருவரும் இடம் பெற்றுள்ள அழகான போஸ்டர் ஒன்றையும் அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளது.




