
இரண்டாவது கணவர் மீது நடிகை அம்பிலி தேவி பரபரப்பு புகார்
சினிமா ஒளிப்பாதிவாளர் லோவல் என்பவரை 2009ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2018ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதற்கு அடுத்த ஆண்டே மலையாள சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அம்பிலி தேவி தனது இரண்டாவது கணவர் மீது புகார் அளித்தார். தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். தற்போது கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரா போலீஸ் நிலையத்தில் கணவர் ஆதித்யன் ஜெயன் மீது புகார் கொடுத்துள்ளார். குடும்ப வன்முறை தொடர்பான பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!