ஓடிடியில் லீட் பண்ணுவாரா 'லீடர்' : இந்த வாரப் பட்டியல் வெளியானது...! | திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார் | ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3' | சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம் | பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா | பிராந்திய மொழிகளை பேசுவதில் ஆர்வம் காட்டும் ஸ்ரீலீலா | வில் அம்பு பட இயக்குனர் மரணம் | ஆகஸ்ட் 14ல் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ் | 42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி |

மலையாளத்தில் கடந்த 2019ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் லூசிபர். மோகன்லால் நடித்த இந்தப்படத்தை இயக்கியதன் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார் பிரித்விராஜ், அரசியல்வாதி மற்றும் அண்டர்கிரவுண்ட் டான் என அந்தப்படத்தில் படம் முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன்லால். படமும் சீரியஸாகவே நகர்ந்தது.
இந்தநிலையில் தற்போது 'ப்ரோ டாடி' என்கிற தனது இரண்டாவது படத்தையும் மோகன்லாலை வைத்தே இயக்குகிறார் பிரித்விராஜ். ஆனால் லூசிபர் படத்திற்கு அப்படியே நேரெதிராக இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கிறது..




