நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் | ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் வடசென்னை பையன்: 'அன்பே டயானா'வின் கதை | ராதிகாவை கிழவியாக மாற்றிய வினீஷ் | துபாயில் அஜித் பாதுகாப்பாக இருக்கிறார்: மேலாளர் தகவல் | 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குனர் மீது பாலியல் புகார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் அனைத்தையும் இழந்த தவக்களை | ரீ ரிலீஸில் ஏமாற்றிய விஜய்யின் 'தெறி' |

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. நடிகர்கள் பிரகாஷ்ராஜ் - விஷ்ணு மஞ்சு ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் தற்போது நடிகை ஜீவிதா தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் மும்முனைப்போட்டியாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகை ஜீவிதா மற்றும் அவரது கணவரான நடிகர் ராஜசேகர் ஆகியோர் செயலாளர் மற்றும் நிர்வாக தலைவராக வெற்றி பெறறனர். ஆனால் ராஜசேகர் தற்போதைய தெலுங்கு நடிகர் சங்க தலைவரான நரேசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ராஜசேகர் போட்டியிடாத நிலையில் ஜீவிதா மட்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்து ஆதரவு திரட்டத் தொடங்கியிருக்கிறார்.




