
மீண்டும் டோலிவுட்டுக்கு வருகிறார் ராஷ்மிகா
ஜூன் 22, 2021
Advertisement
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டிலும், இரண்டாவது பாகம் 2023ஆம் ஆண்டிலும் வெளியாக உள்ளது. மேலும், புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் அனைத்து காட்சிகளையும் இன்னும் 40 நாட்களில் படமாக்கி விட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஜூலை 5-ந்தேதி முதல் இறுதிகட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் தொடங்குகிறார்கள். இந்நிலையில் இதுவரை மும்பையில் முகாமிட்டு ஹிந்தி படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, ஜூலை 5-ந்தேதி முதல் மீண்டும் ஐதராபாத்துக்கு வந்து புஷ்பா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!