ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இதையடுத்து சிரஞ்சீவியின் 153வது படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்க உள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் ரீமேக் ஆக இந்தப்படம் உருவாகிறது.
இன்னும் 152வது படம் முடிவடையாத நிலையில் 153வது படம் துவங்கப்படாத நிலையில் அவரது 154வது படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா (பாபி) என்பவர் இயக்க உள்ளார் என்கிற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 'உப்பென்னா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது, மேடையில் தானாகவே இதனை அறிவித்த சிரஞ்சீவி, இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது என்பதையும் அறிவித்தார்.
கன்னடம் மற்றும் தெலுங்கில் பிரபல கதாசிரியராக விளங்குபவர் இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா. கடந்த சில வருடங்களுக்கு முன் ரவிதேஜா நடித்த பவர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், பவன் கல்யாணின் கப்பார் சிங், ஜூனியர் என்.டி.ஆரின் ஜெய் லவகுசா மற்றும் வெங்கடேஷ் நடித்த வெங்கி மாமா ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.




