நம்பிக்கையுடன் காத்திருக்கும் நயன்தாரா | அர்ஜுன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | கென் கருணாஸின் யூத் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது | 2026 ஜனவரியில் 22 படங்கள் ரிலீஸ் : 20 கோடி கூட லாபம் இல்லையா? | பாவனாவின் 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்' பிப்ரவரி 6ல் ரிலீஸ் | பிரதீப் ரங்கநாதன் ஆக நினைக்கிறாரா அபிஷன் ஜீவிந்த் | 'ஜனநாயகன்' நிலை, இந்த வாரம் தெரிந்துவிடுமா? | ஹிந்தி பட இயக்குநர் வீட்டில் துப்பாக்கி சூடு : 5 பேர் கைது | இந்த வாரமும் 5 சிறிய படங்கள் ரிலீஸ் |

மலையாளம், தமிழை விட சாய்பல்லவிக்கு தெலுங்கில் தான் அதிக வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் அவர் தெலுங்கில் தற்போது லவ் ஸ்டோரி, விராட பர்வம் உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ராணா கதாநாயகனாக நடிக்கும் விராட பர்வம் படத்தில் சாய்பல்லவி பவர்புல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் சாய்பல்லவியின் கதாபாத்திர பெயருடன் கூடிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.
படம் வரும் ஏப்-30ஆம் தேதி வெளியாகிறது. இதுவரை பக்கத்து வீட்டுப்பெண் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தப்படத்தில் வெண்ணிலா என்கிற நக்ஸலைட்டாக நடித்துள்ளார். பாடுவதில் தீராத ஆர்வம் கொண்ட ஒரு கிராமத்து பெண் எதிர்பாராத சூழலால் எப்படி நக்ஸலைட் இயக்கத்தில் சேருகிறாள் என்பதுதான் படத்தின் கதை. வேணு உடுகுலா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடித்துள்ளார்.