
நஷ்டத்துடன் முடிவுக்கு வரும் பெத்தி
புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் "பெத்தி". இப்படம் வெளியாகி 25 நாட்களாகிறது.
400 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக 10 நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு படத்தின் வசூல் நிறையவே குறைய ஆரம்பித்து விட்டது. கடந்த 10 நாட்களில் கூடுதலாக 50 கோடி கூட வசூலித்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்கிறார்கள்.
படத்திற்கான பட்ஜெட், வியாபாரம் ஆகியவை அதிகம் என்பதால் இவ்வளவு கோடி வசூலித்தும் படம் உலக அளவில் லாபத்தைத் தொடவில்லை என டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் மட்டும் நிகர வசூலாக 150 கோடி வசூலைக் கடந்துள்ளதாம். தெலுங்கில் மட்டும் 130 கோடிக்கு விற்கப்பட்டுள்ள படம். அதனால், அங்கு மிகக் குறைந்த அளவில் லாபத்தைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!