ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

நடிகை அனுஷ்கா நடித்த படம் வெளியாகி ஒரு சிறிய இடைவெளி விழுந்து விட்டது. இந்த நிலையில் தான் தெலுங்கில் இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி டைரக்ஷனில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள ‛காட்டி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ராணாவும் அனுஷ்காவும் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ராணா அனுஷ்காவிடம் அவரது ‛அருந்ததி, பாகுபலி', தற்போது ‛காட்டி' ஆகிய படங்களை சுட்டிக்காட்டி எப்போதுமே இது போன்ற கதைகளில் நடிப்பது யார் என்றால் முதல் சாய்ஸாக நீங்கள் இருக்கிறீர்களே.. எப்படி ?” என்று கேட்க அதற்கு அனுஷ்கா, “எனக்கே தெரியவில்லை. நான் கூட இது ஏன் என்று நினைக்கிறேன் ?”. என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அது மட்டுமல்ல காட்டி படத்தின் இயக்குனர் கிரிஷிடம் பேசிக் கொண்டிருந்த போது கூட, 'ஆண்களில் அடிதடி ஹீரோ மாதிரி நானும் ஒரு அடிதடி பெண்ணாக இருக்க முடியுமா என்று கேட்டேன்” என்று கூறினார்.
உடனே ராணா, 'இதுபோன்ற கதைகளுக்கு உங்களைத் தவிர அவர்கள் யாரை தேர்வு செய்து விட முடியும் ?” என்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் இயக்குனர் கிரிஷ் குறித்து அனுஷ்கா கூறும்போது, “அவரால் மட்டுமே இது போன்ற தனித்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களை கொடுக்க முடியும். வேதம் படத்தில் அவர் கொடுத்த சரோஜா என்கிற கதாபாத்திரம் என்னுடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று” என்று கூறியுள்ளார்.




