காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மலையாள சினிமாவில் குணசித்ர நடிகராக அறியப்பட்டவர் விஷ்ணு பிரசாத். அண்ணன், தம்பி, மாதிரியான கேரக்டர்களில் நடித்து வந்தார். மாம்பழ காலம், ரன்வே, பென் ஜான்சன், பதாகா, மராத்தானாடு உள்ளிட்ட படங்களிலும் மற்றும் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் 'காசி' என்ற படத்தில் நடித்தார்.
48 வயதான விஷ்ணு பிரசாத் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவரது மகள் தனது கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தார். மேலும் குடும்பத்தினர் மருத்துவ செலவிற்காக ரூ.30 லட்சம் பணத்தையும் ரெடி பண்ணி வந்தனர்.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு முன்பே விஷ்ணு பிரசாத் சிகிச்சை பலனின்றி திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். பணம் புரட்ட தாமதம் ஆனதால் அவர் இறந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.




