மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் | பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: திடீரென காணாமல் போன பேபி உமா | தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்? | 'மைதிலி என்னை காதலி' நடிகர் மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல் | 'கே. சங்கர் 100' : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் |

மலையாளத்தில் கடந்த வாரம் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் தொடரும். இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று தற்போது நூறு கோடி வசூலை நெருங்கி உள்ளது. இத்தனைக்கும் ஆபரேஷன் ஜாவா, சவுதி வெள்ளக்கா என இரண்டு சின்ன பட்ஜெட் படங்களை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்திக்கு அந்த படங்களை அவர் நேர்த்தியாக இயக்கி வெற்றி படங்களாக கொடுத்ததன் காரணமாகத்தான் மோகன்லாலை வைத்து மூன்றாவது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தையும் வெற்றி படமாக கொடுத்ததால் தற்போது முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார் தருண் மூர்த்தி.
இதனைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக அடுத்ததாக பஹத் பாசில் நடிப்பில் புதிய படத்தை இவர் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு டார்பிட்டோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டார்பிட்டோ என்றால் தொட்டால் மின் அதிர்ச்சி உண்டாக்கும் ஒரு வகை மீன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தயாரிக்கும் ஆசிக் உஸ்மான் நிறுவனம் தான் தற்போது பஹத் பாசில் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஓடும் குதிரை சாடும் குதிரை என்கிற படத்தையும் தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




