ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா | அது போன மாசம், இது இந்த மாசம்…விஜய் ரசிகர்களின் 'உருட்டு' | 'சரோஜா' படத்தில் தவறு… இப்போது கண்டுபிடித்த ரசிகர் | கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி | மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ரிலீஸை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம் | கேரளாவில் முதன்முறையாக பஞ்சாயத்து நிர்வாகத்தால் கட்டப்பட்ட தியேட்டர் : பாவனா திறந்து வைக்கிறார் | தடை செய்யப்பட்ட துரந்தர் படம் பார்ப்பதற்காகவே இந்தியா வந்தார்கள் : ரசிகர்கள் மீது மாதவன் நம்பிக்கை | 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கும் மாதுரி ஜெயின் | அனுபமாவை மட்டன் சாப்பிடுவதையே நிறுத்த வைத்த அதிர்ச்சி சம்பவம் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர், நடிகையும் தனது காதலியுமான பவித்ரா கவுடா என்பவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்கிற கோபத்தில் அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 16 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட நான்கு மாத சிறைவாசத்தில் நடிகர் தர்ஷன் பலமுறை ஜாமினுக்கு விண்ணப்பித்தும் தொடர்ந்து நீதிமன்றத்தால் அது நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் தர்ஷன் தொடர்ந்து முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்து ஆறு வாரம் அவருக்கு இடைக்கால ஜாமின் பெற்று தந்தனர் அவரது வழக்கறிஞர்கள். அப்படி வெளியே வந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றார். ஆனால் சில நாட்கள் கழித்து மருத்துவர்கள் அவரது ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதை கட்டுக்குள் கொண்டு வந்த பின் தான் செய்ய வேண்டும் என புதிய காரணம் ஒன்றை கூறினார்கள்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் வெறும் சிகிச்சை மட்டுமே பெற்று வந்த தர்ஷன் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து ஆஜராகி பின் கிளம்பி சென்றுள்ளார். தனக்கு தேவைப்பட்ட ஜாமின் கிடைத்து விட்டதால் அறுவை சிகிச்சை இனி தேவைப்படாது, இதுவரை பெற்ற சிகிச்சையே போதும் என்பது போல அந்த நாடகத்தை தர்ஷன் அழகாக முடிவுக்கு கொண்டு வந்து விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.




