மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா | பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. சமீபகாலமாக இவர் நடித்து வெளிவந்த ஈகிள், டைகர் நாகேஸ்வர ராவ், மிஸ்டர் பச்சான் ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவின.
கடைசியாக ஹிந்தியில் வெற்றி பெற்ற 'ரைடு' படத்தை தெலுங்கில் 'மிஸ்டர் பச்சான்' என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார். இதனை ஹரிஷ் ஷங்கர் இயக்கிருந்தார். பீபுள் மீடியா பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
சுமார் ரூ. 80 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் திரையரங்குகளில் ரூ. 15 கோடி அளவில் தான் வசூலித்தது என கூறப்பட்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை சரி செய்யும் வகையில் ரவி தேஜா தான் இப்படத்திற்காக பெற்ற சம்பளத்தில் இருந்து ரூ. 4 கோடியை தயாரிப்பாளருக்கு திருப்பி தந்துள்ளார். இவரை போலவே இயக்குனர் ஹரிஷ் ஷங்கரும் ரூ. 2 கோடியை தயாரிப்பாளருக்கு திருப்பி தந்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.