இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் |

மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி நேற்று நடிகை வரலட்சுமியின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் நான் எம்.பி.,யாக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் அமைச்சராக பணியாற்றுவேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன். கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. தமிழ்நாட்டை நேசிக்கிறேன்.
எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் துறை சார்ந்த அனுபவங்கள் எதுவும் தற்போது என்னிடம் இல்லாததால், அதை கற்றுக்கொண்டு வருகிறேன். பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பு பற்றி யோசிக்காமல் அதற்குரிய வேறு வழி என்ன என்று யோசிக்க வேண்டும்.
சபரிமலையில் கடந்த ஆண்டு பக்தர்களுக்கு முறையான தரிசன ஏற்பாடுகள் செய்யவில்லை. சபரிமலையை யாரும் தொட முடியாது. தொட்டவர்கள் எங்கோ காணாமல் போய்விட்டார்கள். என்றார்.
விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் சுரேஷ் கோபி. அத்துடன் சத்தியம் தியேட்டரில் அவரது மகன் கோகுல் சுரேஷ் நடித்த 'ககனாச்சாரி' படத்தை பார்த்து ரசித்தார்.




