‛ஜனநாயகன்' ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட் | மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர | ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு | சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி | திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா | பசில் ஜோசப், அல்லு அர்ஜுன் கூட்டணி உறுதி : ஆனால் அது சக்திமான் கதை அல்ல | விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த பாலிவுட் இசையமைப்பாளர் | நடுவுல நான் எதுக்கு அகர்பத்தி மாதிரி... : சிரஞ்சீவி தமாஷ் | சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் குஞ்சாக்கோ போபன் ஜோடியான ஜெய்பீம் நாயகி. | கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ரசூல் பூக்குட்டி. |

மலையாள சினிமாவின் அடையாளம் மோகன்லால். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். அவர் இயக்கும் முதல் படம் 'பரோஸ்'. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ்வேகா , ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லாலின் நண்பரும் ஆஸ்தான தயாரிப்பாளருமான ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார்.
இந்த படத்தை மோகன்லால் குழந்தைகளை மகிழ்விக்கும் பேண்டசி படமாக உருவாக்கி வருகிறார். குழந்தைகளுடன் அவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், 'மைடியர் குட்டிச்சாத்தான்' படத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் முக்கிய படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 12ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




