70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் | விஸ்மாயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் தொடக்கம் படப்பிடிப்பு நிறைவு | என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில் | சிறை எனக்கு ஐந்தாம் வீடு போல ; ஜாமினில் விடுதலையான இயக்குனர் விக்ரம் பட் விளக்கம் | ‛கேஜிஎப்' இசையமைப்பாளருக்கு 35 லட்சம் மதிப்புள்ள கோல்டு வாட்ச் பரிசளித்த விஸ்வக் சென் |

மலையாளத்தில் கடந்த சில வருடங்களாக சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் எதிர்பாராத விதமாக 50 கோடி வசூலிக்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆச்சரியப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இந்த வருடத்தில் அப்படி முதல் படமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான 'பிரேமலு' என்கிற படம் வெளியான முதல் நாளில் இருந்தே வரவேற்பு பெற்று 50 கோடி வசூலையும் தாண்டி விட்டது. பெரிய அளவில் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாத நஸ்லேன் மற்றும் நமீதா பைஜூ ஜோடியாக நடித்துள்ள இந்த படம் காதலை மையப்படுத்தி வித்தியாசமான கோணத்தில் உருவாகி இருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் ரீமேக் உரிமைக்காக தமிழ், தெலுங்கில் இருந்து சிலர் முயற்சித்து வருகிறார்கள். அதே சமயம் படக்குழுவினர் ரீமேக் உரிமையை தராமல் நேரடியாக ஒவ்வொரு மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த படம் இயக்குனர் ராஜமவுலியின் மகன் எஸ்எஸ் கார்த்திகேயாவை மிகவும் கவர்ந்து விட்டதால் தெலுங்கில் இந்த படத்தை மொழிமாற்றம் வெளியிடும் உற்சாகத்தையும் வழிகாட்டுதலையும் படக்குழுவதற்கு ஏற்படுத்தி தந்துள்ளார். இதை தொடர்ந்து வரும் மார்ச் 8ஆம் தேதி இந்த படம் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள பிரேமலு படக்குழுவினர் இயக்குனர் ராஜமவுலியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.




