பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

பாகுபலி படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் மிகப்பெரிய ஹீரோ ஆகிவிட்டார். தென்னிந்தியாவுக்கு சமமாக பாலிவுட்டிலும் இவரது படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேசமயம் அவர் எப்போதும் போல அதே எளிமையுடன் தான் சக நட்சத்திரங்களை அணுகுகிறார் என்றும் விருந்தோம்பலில் எல்லோரையும் அசத்தி விடுகிறார் என்றும் அவ்வப்போது பலரும் சொல்வதுண்டு. அந்த வகையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சலார் படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.
பிரபாஸிடம் உள்ள உங்களை ஸ்தம்பிக்க வைக்கும் குணாதிசயம் எது என்று பிரித்திவிராஜிடம் கேட்டபோது அவருடைய விருந்தோம்பல் தான் என்று கூறியுள்ளார். ஒருமுறை பிரித்விராஜ் எனது குடும்பத்திற்கு ஹோட்டலில் விருந்தளித்தார். அப்போது எங்களுக்காக அவர் வரவழைத்த உணவு வகைகளை அடுக்கி வைக்கவே ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டது. என்னுடைய 7 வயது மகள் கூட பிரபாஸை பார்த்து எங்கள் மூவருக்கே இவ்வளவு என்றால் எங்களுடன் எங்களது மாமா அத்தைகள் கூட வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அந்த அளவுக்கு பிரபாஸ் நம்மை திக்குமுக்காட வைத்து விடுவார்” என்று கூறியுள்ளார்.




