
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ராட்சச ராஜாவுக்காக இணைந்த ராணா - தேஜா
கடந்த 2017ல் ராணா நடித்த நேனே ராஜா நேனே மந்திரி என்கிற படத்தை இயக்கிய தேஜா அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராணாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதற்கு முன்னதாக தேஜா இயக்கத்தில் அஹிம்சா திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. ராணாவின் தம்பியான அபிராம் டகுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி தேஜா இந்த படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!