நித்திலன் சுவாமிநாதனை அழைத்து பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் | ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திஷா பதானி | பிரதமர் அணிவித்த சால்வை : இளம் பாடகி ஸ்ரீநிதா நெகிழ்ச்சி | மக்கள் மனங்களை வென்ற மாமன் : நடிகர் சூரியின் நெகிழ்ச்சி பேட்டி | மகனுக்காக இணைந்த தனுஷ், ஐஸ்வர்யா : ரஜினியின் நெகிழ்ச்சி பதிவு | கோமாதா என் குலமாதா, பாகுபலி 2, கட்டா குஸ்தி : ஞாயிறு திரைப்படங்கள் | தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா |
மலையாளத்தில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட படம் ஆடு ஜீவிதம். பிரபல கதாசிரியரும் இயக்குனருமான பிளஸ்சி, ஆடு ஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக பிரித்விராஜ் மற்றும் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நுழைந்துள்ளார்.
இந்த படத்தில் துபாயில் ஒட்டகம் மேய்க்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக பிரித்விராஜ் நடித்துள்ளார். இதற்காக அவர் உடல் எடையை கூட்டி குறைத்து நடிக்க வேண்டி இருந்தது. இதனால் இந்த படம் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய இடைவெளிகள் விட்டு படபிடிப்பு நடைபெற்றது. ஒரு வழியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் 2024 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.