இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் |

திரிஷ்யம் படத்தின் மூலம் மலையாள திரைலகில் ஒரு புதிய வெற்றி கூட்டணியை மோகன்லாலும், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இந்த கூட்டணி வெற்றி படங்களை கொடுத்து வருகிறது. கொரோனா தாக்கத்திற்கு முன்பாக மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் என்கிற படத்தை ஜீத்து ஜோசப் துவங்கினார். அதன்பின் அந்தபடம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து நேரு என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை பிரியாமணி மோகன்லாலுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நீதிமன்றத்தை மையப்படுத்தி, ஒரு பிரபல வழக்கை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது.
இதில் மோகன்லால் பிரியாமணி இருவருமே வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே உருவான மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் 2024 ஜனவரி 25ல் ரிலீஸ் ஆகும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.




