என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் | 'விஸ்வரூபம்' படத்தின் கதையை சொல்ல முடியாமல் போனது வருத்தம்! - செல்வராகவன் | மறைந்த ஆஷா போஸ்லேவின் பிறப்பும் திரை வாழ்க்கையும் | பிரபல திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே காலமானார் | 'ஜனநாயகன்' லீக், சைபர் கிரைம் விசாரணை ஆரம்பம் | பிஸியான நடிகையாக கயாடு லோஹர் | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சிகிரி சிகிரி' பாடல் |

கடந்த 2021ம் ஆண்டில் தமிழில் சமுத்திரக்கனி இயக்கி, நடித்து ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் ‛வினோதய சித்தம்'. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்தபடம் தற்போது தெலுங்கில் ‛ப்ரோ' என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. சமுத்திரக்கனியே இயக்கி உள்ளார். பீபுல் மீடியா பேக்டரி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் வருகின்ற ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து படத்தின் முதல் பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மை டியர் மார்கண்டேயா என்கிற தலைப்பில் முதல் சிங்கிள் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்த வார இறுதியில் முதல்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.